Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

ஜானகியின் மருமகள்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
அது ஒரு பணியாளர்கள் குடியிருப்பு!

வரிசையாக சற்று இடைவெளி விட்டு வீடுகள் அணிவகுத்திருந்தது.

அதில் ஒரு வீட்டில் தான் சுமங்கலி வசித்து வருகிறாள். இருபத்தியாறு வயதில் அவள் கல்லூரி செல்லும் பெண்ணைப் போல தோற்றமளித்தாள்! தலை சீவி, பொட்டு வைத்து, சிறிது பூ வைத்து தன் அலங்காரத்தை முடித்தவளின் கண்கள் கலங்கியது.

"சுமி, நேரமாச்சு பார், ஆனந்தியை இன்னமும் ரெடி பண்ணலை, சீக்கிரம் வாம்மா! பாப்பா டிபன் சாப்பிட்டா,நீ சாப்பிடலை! வந்து உட்கார் நானே ஊட்டி விடுறேன்! என்றார் மாமியார் ஜானகி!

"ஐயோ அத்தை! அதெல்லாம் வேண்டாம்! முதல் நாள் இல்லையா அதுதான் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நான் சாப்பிட்டு, அம்முவையும் ரெடி பண்ணிடுறேன் என்று சாப்பிட அமர்ந்தாள்! அவளது தலையை பரிவாக தடவிவிட்டு உள்ளே சென்றார் மாமியார்

சிறிது நேரத்தில் ஐந்து வயது மகள் ஆனந்தியை தயார் செய்து கொண்டிருந்தாள். மாமியார் அவர்கள் இருவரது சாப்பாட்டு கூடையை கொணர்ந்து வைத்தார்!

அன்றைக்கு முதல் முறையாக சுமங்கலி வேலைக்கு போகிறாள்.
போகும் வழியில் உள்ள பள்ளியில் மகளை விட்டுவிட்டு செல்ல வேண்டும். சிறிது நாட்களுக்கு முன்பு வரை அது அவளது கணவன் மதனின் பொறுப்பாக இருந்தது. இனி அவளது பொறுப்பு!

வாயிலுக்கு வந்து, தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவளை ஆங்காங்கே நின்றிருந்த அந்த குடியிருப்பினர் ஆச்சரியமாக சிலர், முகச்சுளிப்போடு சிலர், கோபத்துடன் சிலர் என பாத்திருந்தனர்!

சுமங்கலி யாரையும் கவனிக்காமல் தன் மகளை பின்புறம் அமர வைத்துவிட்டு,"அத்தை போயிட்டு வர்றோம் வந்து கதவை சாத்திக்கோங்க" என்றவள்,"அம்மு, கெட்டியா அம்மாவை பிடிச்சுக்கோடா"என்றவாறு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்!

"கலி முத்திடுத்து பார்த்தேளா? என்றாள் பங்கஜம் மாமி!

"இந்த காலத்து பொம்மனாட்டிகள் சாஸ்திர சம்பிரதாயத்தை மதிக்கிறது இல்லை.." என்றாள் கோமளா!

"அக்கா, இப்படி இருந்தாதான் அவங்களுக்கு பாதுகாப்பு, அவங்க செய்யறது தப்பே இல்லை" என்றது ஒரு இளவட்டம்! அதை ஆதரித்தனர் இன்னும் சில இளவட்டங்கள்!

"டேய் , உங்க வேலையை போய் பாருங்கடா, இதெல்லாம் அந்த காலத்துல இருந்தே பெரியவங்க சொல்லி வச்சுட்டுப் போனது! அதை பின்பற்றினா எந்த பாதகமும் வந்துடாது" என்றாள் பங்கஜம்

"ஏன்டி பங்கஜம் ஏன் இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்கிறே? அந்த காலத்துல பெண்கள் வீட்டோட படிப்பறிவு இல்லாம இருந்தா! ஆனால் இப்ப அப்படியா இருக்கா? வெளிநாட்டுக்கு தனியா போய் பொண்ணுங்க வேலை பார்க்கிற காலம் இது! இன்னும் விண்வெளிக்கு கூட பெண்கள் போறாங்க! இன்னும் அந்த காலம் போல இருக்கணும்கிறது சுத்த முட்டாள்தனம்! என்னை கேட்டா சுமங்கலி செய்யறதுல தப்பில்லைன்னு தான் சொல்வேன்" என்றார் சடகோபன் மாமா!

"சரியா சொன்னீங்க மாமா,சுமங்கலி அப்படி என்ன பெரிய கொலை பாதகம் பண்ணிட்டா?"என்றாள் வனஜா.

"அவள் போய் சம்பாதனை பண்ணித்தான் குடும்பத்தை காப்பாத்தணும்னு கடவுள் எழுதிட்டார்..! அதுக்காக இப்படியா போவா? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? கண்டபடி பேசறதுக்கு இடம் கொடுத்தாப்ல ஆகிடுமே..!" என்றாள் ஞானம்.

"எல்லாரும் செத்த வாயை மூடுங்கோ! எதுக்கு இப்ப ஆளாளுக்கு கருத்து சொல்லிட்டு இருக்கீங்க? சுமங்கலி என் மருமகள், இனிமே அவள்தான் எனக்கு மகள்! வெள்ளத்துல உயிருக்கு போராடினவங்களை என் பிள்ளை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போய் காப்பாற்றினான்..! அதிக உழைப்பு உடம்பு தாங்கலை போய் சேர்ந்துட்டான்! என் பிள்ளையை நான் பறிகொடுத்துட்டேன், எனக்கும் வருத்தம் தான்! வாழ வேண்டிய வயசுல என் மருமகள் துணையைத்தான் இழந்து நிற்கிறாள்.. அவளோட வாழ்க்கையை இழக்கலை..! பிறந்த வீட்டுல பெத்த தாய் எப்படி அவளை அலங்காரம் பண்ணி வளர்த்தாங்களோ அப்படித்தான் அவள் என் வீட்டிலும் இருப்பாள்! நடுவில் என் மகனை கல்யாணம் செய்துட்டதுக்கு அடையாளம் தாலியும் மெட்டியும் மட்டும் தான்! அதை அவன் போனதும் நீக்கியாச்சு! அதனால அவள் வயசுப் பெண்களைப் போல பூமுடித்து, பொட்டு வச்சு அலங்காரம் பண்ணிக்குவா! இதுக்கு மேலே யாரும் என் மகளோட அலங்காரத்தை பற்றி பேசறதை நான் விரும்பலை! என்றார் ஜானகி!

எல்லாரும் வாயடைத்துப் போனார்கள்! ஆனாலும் பங்கஜம் மாமி சும்மா இருக்காமல், " ஏன்டி ஜானு, நீ பேசறது எல்லாம் கதைக்கு தான் சரியா இருக்கும்! நடப்புல சரியா வருமா? நாளைக்கே யாராவது அவளை பத்தி தெரியாம பொண்ணு கேட்டு வந்துட்டா என்ன பண்ணுவே? என்றாள் விஷமமாக!

"என் மருமகள் வாழ வேண்டியவள், அவளை புரிஞ்சுட்டு வந்து பெண் கேட்கிற ஒருத்தனுக்கு மறு கல்யாணம் பண்ணி வைப்பேன்! இதுதான் என் மகனுடைய கடைசி ஆசையும்! என்று பதிலளித்து பங்கஜத்தின் வாயை அடைத்தாள் ஜானகி!

"பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கும் வரை பெண்களுக்கு முன்னேற்றம் என்பது கனவே!
 

Attachments

  • FB_IMG_1726838580360.jpg
    FB_IMG_1726838580360.jpg
    44.5 KB · Views: 0
Back
Top