மதுவந்தி என்னவோ சுந்தரத்திடம் சொல்லி அனுப்பி விட்டாள் தான். ஆனால் அவனுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாதே என்று உள்ளூர உதறல்.
காலை உணவு முடித்துக் கொண்டு சுந்தரத்திற்காக காத்திருந்தான் ரவீந்தரன். இன்று எப்படியும் கிடைத்துவிட்டால் தந்தையிடம் நாளையே புறப்பட்டு வரச் சொல்லிவிடலாம் தான். ஆனால் அங்கே அக்காவை அந்த நிலையில் விட்டு வருவதை நினத்தால் கொஞ்சம் கவலையாகத் தான் இருந்தது. அத்தான் நிகிலன் மனைவியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வார் தான். இப்போது அப்பா வீட்டில் இருப்பதால் ஓரளவு அம்மாவையும் அக்காவையும் முடிந்தளவிற்கு பார்த்துக் கொள்கிறார். இப்போது அவர் இங்கே வந்து விட்டால் அத்தானுக்கு அதிக வேலைப் பழுவாகிவிடும். அதற்குத்தான் என்ன ஏற்பாடு செய்வது என்று புரியவில்லை. ஒரு நம்பகமான ஆள் அங்கே இருந்தால் நன்றாக இருக்கும். அந்த ஊரில் யாரையும் எளிதில் நம்பி வீட்டிற்குள் வைப்பது என்பது நடவாத காரியம். கடவுள் தான் ஏதாவது ஒரு நல்ல வழி காட்டவேண்டும். மனமுருகி வேண்டிக் கொண்டபோது கதவு தட்டும் ஓசை கேட்டது.
"வாங்க சுந்தரம் நான் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்" ரவீந்தரன் கதவு திறந்துவிட்டபடி சொன்னான்.
" வீடு ரெடியா இருக்குதுங்க சார். நீங்க இப்படி அம்மாவுக்கு வைத்தியம் பார்க்க வந்திருக்கீங்கனு சொல்லவும் அட்வான்ஸ் பணம் வேணாம்னு சொல்லிட்டாங்க. வாடகையா உங்களால் முடிஞ்சதை தந்தாப் போதும்னு சொல்லிட்டாங்க. இப்போதைக்கு எங்கயும் வீடு கிடைக்காதுங்க ஐயா. நானும் நாலு பேர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். எல்லாருமே நீங்க சொல்ற இடத்துப் பக்கத்துல வீடு ஒன்னும் காலி இல்லேனுட்டாங்க. ஒருத்தர் தான் நான் பேசிட்டு இருக்கிறதைப் பார்த்து அவரோட வீடு சும்மா கிடக்குது வேணும்னா வந்து பாருங்கன்னு சொன்னாரு. அவருக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கனும்னு அவசியம் இல்லாததால் தான் வாடகையை கூட இவ்வளவு வேணும்னு கேட்கலைன்னு சொன்னார்.
நான் கார்த்தால போயிப் பார்த்தேனுங்க சார். வீடு நல்லா இருக்கு. நீங்கதான் இப்ப முடிவு எடுக்கனும்." சுந்தரம் சொல்வதை குறுக்கிடாமல் கேட்ட ரவீந்தரன், யோசனையில் ஆழ்ந்தான். இந்தக் காலத்தில் துண்டு இடத்தைக்கூட வாடகைக்கு விட்டு காசு பார்க்கும் மக்கள் தான் அதிகம். இங்கே என்றால் முன் பணம்கூட வேண்டாம் என்கிறார்கள். வாடகையும் முடிந்ததை கொடுத்தால் போதும் என்கிறார்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா?, அவனுக்கு வியப்பாக இருந்த போதும் ஏதேனும் வில்லங்கத்தை விலைக்கு வாங்கிவிடக் கூடாதே என்று மனதுக்குள் யோசனையாக இருந்தது. இருக்கிற சூல்நிலையில் அது வேறு அவஸ்த்தையாகி விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய வேளையில் சுந்தரம் குறுக்கிட்டார்.
ரொம்பவும் யோசிக்கிறானே எங்கே மறுத்து விடுவானோ என்று பயந்தவராய்..."சார், எனக்கு உங்க நிலைமை புரியுது. புது இடம் ஆட்கள் எப்படியோ என்று யோசனையா தான் இருக்கும். நீங்க எதுக்கும் முதல்ல வீட்டை பாருங்க. பிடிச்சா ஒத்துக்கோங்க… இல்லைன்னாக்க வேற வீடு பார்க்க சொல்லலாம்" என்றார் சுந்தரம்.
தேவையிலிருப்பவர்களுக்கு தேர்வு செய்யும் உரிமை இல்லை. கிடைப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர ஆராயக்கூடாது. அப்படியே அவனை மீறி என்ன நேர்ந்துவிடப் போகிறது? என்று சுந்தரத்துடன் கிளம்பிவிட்டான் ராவீந்தரன்
மதுவந்திக்கு உள்ளூர பதற்றமாகவே இருந்தது. வீடு ரவீந்தரனுக்கு பிடிக்க வேண்டுமே என்ற யோசனையில் வேலையில் முழுகவனம் செலுத்த முடியவில்லை. கைபேசி ஒலிக்க அவசரமாய் எடுத்தாள். சந்திரமௌலி தான் பேசினார். "என்னாச்சு அப்பா? என்றாள் மூச்சை இழுத்துப் பிடித்தவாறு.
"ரவீந்தரனுக்கு வீடு பிடித்துவிட்டது. நாம் பேசியது போல சமையலுக்கு நம்ம பௌர்ணமியை ஏற்பாடு செய்தாச்சும்மா. ரொம்ப திருப்திதான் அவருக்கு. வாடகை இரண்டாயிரம் தர்றேன்னார். நான் ஆயிரம் போதும் வைத்திய செலவெல்லாம் இருக்கேன்னு சொல்லி சம்மதிக்க வச்சுட்டேன்ம்மா. சரிதானேம்மா.?"
"ரொம்ப சரி அப்பா, என்ற போது அவளையும் அறியாமல் குரல் தழுதழுத்தது.
"அடடா மதும்மா என்னடா அதுதான் எல்லாம் நம் யோசனைப்படியே நடக்குதே அப்புறம் எதுக்கு அழுகை.? கண்ணை துடைச்சுக்கோ. நீ இப்போ பொறுப்பான வேலையில் இருக்கிற ஞாபகம் வச்சுக்கோ. யாராவது பார்த்தா ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சிரிக்கப் போறாங்க’என்றதும்
"போங்கப்பா நான் ஒன்னும் அழலை". என்றாள் கொஞ்சலாய்…
மறுமுனையில் சந்திரமௌலி பலமாய் சிரிக்க, "அப்ப்ப்பா" என்று சிணுங்கவும்
"சரிம்மா மற்றதை வீட்டுக்கு வந்தப்புறம் பேசலாம். டேக் கேர்மா" என்று அவர் பேச்சை முடித்து கொள்ள, ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்தாள் மதுவந்தி.
ரவீந்தரனின் அக்கா சுமதிக்கு என்னாயிற்று?? மனோகரி வந்த பின்பு மதுவந்தி அவளை சந்திப்பாளா?