மதுவந்தியின் நோக்கம் அதுவல்ல. அதே போல அப்படி ஒரு சூழ்நிலை அமையும் என்றும் எண்ணவும் இல்லை. கும்பலில் கலந்து முன்னேறியவள் ரயிலில் சட்டென்று ஏறிவிட்டாள். அது முதல் வகுப்பு பெட்டி. அங்கே வேறு பயணிகள் தென்படவில்லை. அதுவே சற்று பாதுகாப்பு தான் என்று எண்ணினாள். ஏறியதுமே வண்டி புறப்பட மதுவந்தி நிம்மதிப் பெருமுச்சுடன் கதவோரம் சாய்ந்து நிற்க.. யாரோ அந்தப் பெட்டியில் ஏற முற்பட்டதை உணர்ந்து ஒரு கணம் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
அங்கே ஒரு முதியவர் அந்த பெட்டியின் படியில் காலை வைத்து கைப்பிடியை பிடித்திருந்தவர் தடுமாறி விழப் போவதை பார்த்துவிட்டு அவர் உள்ளே வருவதற்காக கைகொடுத்து உதவினாள். பதற்றமாய் ஏறியவருக்கு நிற்கக்கூட முடியவில்லை. மதுவந்தி அவரைத் தாங்கிப்பிடித்து பக்கவாட்டிலிருந்த இருக்கையில் அமர வைத்தாள், கொஞ்சம் தண்ணீரைக் கையில் பிடித்து அவரது முகத்தில் தெளித்தாள். மெல்ல கண்ணை திறந்தவர், சைகைமூலம் ஒரு திசையை காட்டினார். அங்கே ஒரு இருக்கையில் பெட்டியும் தண்ணீர் பாட்டிலும் இருக்க, மதுவந்தி ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை கொணர்ந்து அவரிடம் தந்தாள். சட்டைப்பையிலிருந்து மாத்திரையை எடுத்துப் போட்டு தண்ணீரைப் பருகி சற்று ஆசுவாசம் ஆனார் பெரியவர். மதுவந்திக்கும் கூட ஏனோ மனதிலிருந்த இறுக்கம் தளர்ந்தாற் போல நிம்மதி பெருமூச்சு விட்டாள். அந்தப் பெரியவர் மெல்ல எழுந்து தனது இருக்கைக்கு சென்று அமர்வதை பார்த்தவாறு நின்றாள் மதுவந்தி.
ரயில் வேகமெடுக்கவும் தான், அவளுக்கு டிக்கெட் கூட எடுக்காமல் ஏறிவிட்டது நினைவிற்கு வந்தது. சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வேறு வருவாரே, என்ன செய்வது? எல்லாம் அந்த ராஸ்கலால் வந்தது என்று ஆத்திரமாய் எண்ணிய போது அந்தப் பெரியவர்,
"இங்கே வாம்மா குழந்தை." என்று அவளை அழைக்க,"என்ன சார், என்ன செய்யுது." பரிவுடன் வினவினாள்.
"இப்ப ஒன்னுமில்லைம்மா. நல்ல சமயத்துல உதவி பண்ணுனேம்மா. ரொம்ப நன்றிம்மா." நீ மட்டுமில்லைன்னா நான் போய் சேர்ந்திருப்பேன்மா." என்றதும் சட்டென்று தன் தந்தையின் நினைவில் தொண்டை அடைத்து கண்கள் கலங்கிவிட,
"அடடா அப்படில்லாம் சொல்லாதீங்க சார்" என்றாள், அவசரமாய்!
"ஆமா உங்க லக்கேஜ் எல்லாம் இங்கே இருக்க நீங்க இப்பதான் வர்றீங்க? இதை யார் கொண்டு வந்தாங்க சார்" என்று தன் சந்தேகத்தை கேட்டுவிட்டாள்.
"நான் அப்பவே வந்துட்டேன்மா. இதோ இப்போ சாப்பிட்டேனே மாத்திரை. அது தீர்ந்து போச்சு. வழியில இப்படி திடும்னு வலி வந்தாக்க தேவைப்படுமேன்னு வாங்கப் போனேன். பதற்றம் கூடாதுன்னு டாக்டர் சொன்னார். மனசு நாம சொல்றாப்ல எல்லாம் கேட்குதாமா? என்றவர் ஏதோ யோசனை வந்தவராய் "ஆமா நீ எந்த ஊருக்கு போறேம்மா? என்று கேட்கவும் சொல்வதறியாது விழித்தாள் சின்னவள்.
"என்னம்மா யோசிக்கிறே? இந்த ஆளுகிட்ட நம்பி சொல்லலாமா வேணாமான்னா? என்று புன்னகைத்தார்.
இந்த ரயில் எங்கே போகிறது என்று தெரியாது, கூடவே அவளது எண்ணம் இதில் பயணம் செய்வதாகவே இல்லை. மருதமுத்துவிடமிருந்து தற்காலிகமாய் தப்பிக்கவென்று வேறு வழியின்றி ஏறிவிட்டாள். இப்போது இந்தப் பெரியவரிடம் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்து தன் கதையை சொல்வது என்று யோசித்தவள், இப்போது இந்த இக்கட்டில் அவளை காப்பாற்ற அவரால் தான் முடியும், ஆகவே அவரிடம் சுருக்கமாக உண்மையைக் கூறினாள்.
"சார் எனக்கு இந்த வண்டி எங்கே போகுதுன்னு கூட தெரியாது. என்னை அத்தை மகன் துரத்திட்டு வர்றான். பாதுகாப்புக்காக ஏறிவிட்டேன். பயணம் செய்யனும்னு நினைக்கலை. அதான் டிக்கெட் கூட எடுக்கலை. வேற வழி இல்லாமல் ஏறிட்டேன் சார். பணம் இருக்கிறது என்கிட்ட, இப்போ பரிசோதனைக்கு டிடி வருவாரே என்ன செய்வது என்று தெரியவில்லை’’ என்றாள் மதுவந்தி கலக்கமாய்.
"எல்லாம் கடவுள் செயல்மா". அவனோட கணக்கு நமக்கு என்னம்மா புரியும்? நீ என் பொண்ணு மாதிரி இருக்கிறே, கவலைப்படாதேம்மா. டிடி வந்தா நான் பேசிக்கிறேன்." அவர் சொன்னது போலவே டிடியிடம் பேசி பணத்தையும் கட்டி மதுவந்திக்கு அபயம் அளித்தார்.
விஷயம் அத்தோடு முடியவில்லை. தன்னைப் பற்றி மதுவந்தியிடம் சொன்னார். நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் சந்திர மௌலி. அவரது அண்ணனும் அண்ணியும் ஒரு விபத்தில் காலமாகிவிட அவர்களின் மகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை. அழகும் பாசமுமான மகள் மாதவி. அவள் மீது அத்தனை பாசம் வைத்திருந்தார். ஆனால் படிக்க போன இடத்தில் காதல் என்று எவனிடமோ ஏமாந்து போனாள். அந்த ஏமாற்றம் தாங்காமல் ஹாஸ்டலில் தூக்கு மாட்டிக் கொண்டுவிட்டாள். முந்தைய நாள்தான் அவளுக்கு இறுதிச் சடங்கு முடிந்தது. இன்று ஊர் திரும்புகிறார். சோகத்தில் இருக்கும் இருவருக்குமே இழப்பின் வலி புரிந்ததால் ஒருவருக் கொருவர் ஆறுதலானார்கள்...
அன்று முதல் புதிதாக ஒரு அப்பா, மகள் உறவு தொடர்ந்தது....
கொடைக்கானலில் ஹோட்டல், ட்ராவல்ஸ் என்று தொழில்கள் இருந்தது. அதை கவனிக்க மதுவந்திக்கு கற்றுக் கொடுத்தார். பாதியில் விட்ட படிப்பையும் படிக்க வைத்தார். அவளது ஆசைப்படி வீட்டை ஆதரவற்றக் குழந்தைகளுக்காக எழுதிவைக்க உதவினார். ஆள் பலமும் பணபலமும் கண்டு சரளாவும் மருதமுத்துவும் விலகிப் போனார்கள். அதன் பின் அவள் வாழ்ந்த மண்ணிற்கு மதுவந்தி செல்லவில்லை. ....
எல்லாமும் மனதுக்குள் புதைத்து விட்டு தந்தைக்கு மகளாய் மதுவந்தி புதிய அவதாரம் எடுத்திருந்தாள்.
ஆனால்....
ரவீந்தரனைப் பார்த்துவிட்டது முதல் பழைய நினைவுகள் தோன்றி மனது பரிதவித்தது. மனோகரிக்கு என்ன நேர்ந்திருக்க கூடும்?...