கடந்து போ என்று இயல்பாய்
சொல்கிறேன்...
நீயோ..
சொல்வதைப் போல்
செய்வதொன்றும்
அத்துணை சுலபமில்லை
என்று மனம்கசந்து நிற்கிறாய்...
உன்னை பயன்படுத்தும்
ஒருவரை நீயும்
பயன்படுத்திக்கொள் என்கிறேன்.
என்னால் அது முடியாது
என்று மனம் உடைகிறாய்..
உன்னை வேண்டாம் என்பாருக்கு
உனக்கும் அவர்கள்
வேண்டாம்...